கீழ்பென்னாத்தூர் அருகே, கள்ளக்காதலனுடன் கல்லூரி மாணவி தற்கொலை
கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவி, கள்ளக்காதலனுடன் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள தள்ளாம்பாடியை சேர்ந்த சேட்டு மகன் தாமஸ் (வயது 26). கீழ்பென்னாத்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமானது. இவருடைய மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
தாமஸ் வேலைபார்த்த ஓட்டல் அருகில் அமீர் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் மகள் ரிஸ்வானா (19). தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக தாமசும், ரிஸ்வானாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற ரிஸ்வானா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அமீர் கீழ்பென்னாத்தூரில் போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையில் தனது நண்பருக்கு செல்போனில் பேசிய தாமஸ், ரிஸ்வானாவுடன் வீட்டை விட்டு வெளியேறியது பற்றியும், இது குறித்து இரண்டு வீட்டாருக்கும் தெரிந்தால் பிரச்சினை ஆகும் என்பதால் கத்தாழம்பட்டு புதூரில் உள்ள சுடுகாட்டில் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தாமஸ், ரிஸ்வானா ஆகியோரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். அதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story