திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 87 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,904ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 87 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,904ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 Sept 2020 11:15 AM IST (Updated: 3 Sept 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2904- ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர், 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 6 ஆயிரத்தை நெருங்கியே வந்து கொண்டிருக்கிறது. இது பலரையும் அச்சமடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் பாதிப்பு இருந்தது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்த 59 வயது ஆண், பட்டுக்கோட்டையார்நகரை சேர்ந்த 40 வயது ஆண், கரட்டாங்காட்டை சேர்ந்த 45 வயது ஆண், வடிவேல்நகரை சேர்ந்த 58 வயது ஆண், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 32 வயது ஆண், தாராபுரம்ரோட்டை சேர்ந்த 29 வயது ஆண், மாஸ்கோநகரை சேர்ந்த 49 வயது ஆண், பிச்சம்பாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண், பெரியதோட்டத்தை சேர்ந்த 62 வயது ஆண், மிஷன்தெருவை சேர்ந்த 42 வயது ஆண், மங்கலம்ரோட்டை சேர்ந்த 48 வயது ஆண், தொட்டிபாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், மூலனூரை சேர்ந்த 64 வயது பெண், வெள்ளகோவிலை சேர்ந்த 37 வயது ஆண், 57 வயது ஆண், 35 வயது பெண், செட்டிபாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், நல்லூர் சிவசக்திநகரை சேர்ந்த 54 வயது பெண், அமர்ஜோதிகார்டனை சேர்ந்த 45 வயது ஆண், 12 வயது சிறுவன், பொங்கலூரை சேர்ந்த 28 வயது ஆண், 26 வயது ஆண், கண்டியன்கோவிலை சேர்ந்த 27 வயது ஆண், பொங்கலூரை சேர்ந்த 21 வயது ஆண், 20 வயது ஆண், சின்னகோவிலை சேர்ந்த 38 வயது பெண், வலையபாளையத்தை சேர்ந்த 23 வயது ஆண், முருகம்பாளையத்தை சேர்ந்த 58 வயது ஆண், 45 வயது பெண், சின்னேரிபாளையத்தை சேர்ந்த 47 வயது ஆண், புதுப்பாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், என்.ஜி.பாளையத்தை சேர்ந்த 26 வயது பெண், வெள்ளகோவிலை சேர்ந்த 42 வயது ஆண், பூலுவப்பட்டியை சேர்ந்த 52 வயது ஆண், மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், 30 வயது பெண், சின்னபொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண், காந்திநகரை சேர்ந்த 53 வயது பெண், சின்னசாமி லே அவுட்டை சேர்ந்த 39 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 54 வயது பெண், கொங்குமெயின்ரோட்டை சேர்ந்த 37 வயது ஆண், திருப்பூர் கே.எஸ்.சி. பள்ளி பகுதியை சேர்ந்த 53 வயது ஆண், மூகாம்பிகைநகரை சேர்ந்த 35 வயது ஆண், ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண், இந்திராநகரை சேர்ந்த 47 வயது பெண், 50 வயது பெண், ஜோதிநகரை சேர்ந்த 46 வயது ஆண், கொளத்துப்பாளையத்தை சேர்ந்த 57 வயது ஆண், பெரிச்சிபாளையத்தை சேர்ந்த 46 வயது ஆண், வெள்ளகோவிலை சேர்ந்த 34 வயது பெண், 60 வயது பெண், கண்ணகிநகரை சேர்ந்த 50 வயது ஆண், பி.என்.ரோட்டை சேர்ந்த 53 வயது பெண், ராஜிவ்நகரை சேர்ந்த 22 வயது ஆண், 51 வயது ஆண், குமரன்நகரை சேர்ந்த 48 வயது ஆண், கொங்குமெயின்ரோட்டை சேர்ந்த 41 வயது பெண், விஜயாபுரத்தை சேர்ந்த 65 வயது ஆண், ஆஞ்சநேயர் கோவில்தெருவை சேர்ந்த 51 வயது ஆண், கருவம்பாளையத்தை சேர்ந்த 55 வயது ஆண், கே.டி.சி. பள்ளி ரோட்டை சேர்ந்த 27 வயது ஆண், பெருமாநல்லூரை சேர்ந்த 30 வயது ஆண், அரண்மனைப்புதூரை சேர்ந்த 31 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 32 வயது ஆண், அவினாசியை சேர்ந்த 24 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 60 வயது பெண், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 27 வயது ஆண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், காங்கேயம்ரோட்டை சேர்ந்த 64 வயது ஆண், அவினாசியை சேர்ந்த 30 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 59 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 35 வயது ஆண், அப்பாச்சிநகரை சேர்ந்த 73 வயது ஆண், பொங்கலூரை சேர்ந்த 70 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 83 வயது ஆண், உடுமலை கே.ஜி.நகரை சேர்ந்த 62 வயது பெண், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 68 வயது ஆண், கருவம்பாளையத்தை சேர்ந்த 22 வயது பெண், பூலுவப்பட்டி பொன்னம்மாள்நகரை சேர்ந்த 21 வயது ஆண், தெற்குபாளையத்தை சேர்ந்த 34 வயது ஆண், ராஜாஜிநகரை சேர்ந்த 53 வயது பெண், மரக்கடை பகுதியை சேர்ந்த 35 வயது பெண், ஊத்துக்குளி கரட்டுப்பாளையத்தை சேர்ந்த 61 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 55 வயது பெண், பண்ணாரி அம்மன் கார்டனை சேர்ந்த 47 வயது ஆண் ஆகிய 87 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 904-ஆக உயர்ந்துள்ளது.

Next Story