கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கொன்ற நண்பர் கைது


கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கொன்ற நண்பர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2020 11:30 AM IST (Updated: 3 Sept 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம்,

பீகார் மாநிலம் சம்திஸ்ப்பூரை சேர்ந்தவர் வீர்சங்கர்சக்னி (வயது25). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே க.அய்யம்பாளையத்தில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் (30) என்பவரும் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரே மாநிலம் என்பதால் நண்பர்களான பழகி வந்தனர்.

இந்த நிலையில் ராம்குமாரிடம் ரூ.5 ஆயிரம் கடனாக வீர்சங்கர்சக்னி வாங்கியுள்ளார். அதன்பின்னர் அவர் கடனை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீர்சங்கர் சக்னியிடம், கடனை தருமாறு ராம்குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்குமார் அருகே கிடந்த மது பாட்டிலை எடுத்து வீர்சங்கர்சக்னியை வயிற்றில் குத்திக்கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார்.

இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்திலுள்ள அம்மா உணவகம் அருகில் பதுங்கியிருந்த ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

Next Story