நாகை மாவட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்


நாகை மாவட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Sept 2020 3:45 AM IST (Updated: 4 Sept 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி 3-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சிவக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் பிரகாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர் களை மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று 300 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Next Story