ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்கும் முடிவுக்கு சுப்ரியா சுலே பாராட்டு


ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்கும் முடிவுக்கு சுப்ரியா சுலே பாராட்டு
x
தினத்தந்தி 4 Sept 2020 6:37 AM IST (Updated: 4 Sept 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்கும் முடிவுக்கு சுப்ரியா சுலே எம்.பி. பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மும்பை ஆரேகாலனியில் உள்ள 600 ஏக்கர் நிலத்தை வனப்பகுதியாக அறிவிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இந்த முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில், ‘‘இயற்கையை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு பலன் தரும் வகையில் சுற்றுச்சூழல் சமநிலையை காப்பதில் மகாவிகாஸ் அகாடி அரசு கவனமாக உள்ளது" என கூறியுள்ளார்.

இதேபோல அவர் மாநிலத்தில் உணவகங்களில் பொது மக்களை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர், ‘‘உணவகங்கள் நடத்தி வருபவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அவை முழுமையாக திறக்கப்பட வேண்டும். இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடலாம். உணவக தொழில் புரிபவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு முதல்-மந்திரி சாதகமான முடிவை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

தற்போது மராட்டியத்தில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story