பாப்பாரப்பட்டி அருகே, பள்ளி மாணவி விஷம்குடித்து தற்கொலை


பாப்பாரப்பட்டி அருகே, பள்ளி மாணவி விஷம்குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 Sept 2020 3:45 AM IST (Updated: 4 Sept 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே எட்டியாம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் ஜெயந்தி (வயது 15). இவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது 11-ம் வகுப்பு படிக்க இருந்தார்.

இந்தநிலையில் ஜெயந்தியை அவருடைய தாய் பழனியம்மாள் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜெயந்தி வீட்டில் விஷம்குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெயந்தி இறந்தார்.

இதுபற்றி பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story