வெளி மாவட்டங்களுக்கு 7-ந் தேதி முதல் போக்குவரத்து: பஸ்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரம்


வெளி மாவட்டங்களுக்கு 7-ந் தேதி முதல் போக்குவரத்து: பஸ்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 Sept 2020 3:08 PM IST (Updated: 4 Sept 2020 3:08 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 7-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. இதையொட்டி பஸ்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடங்க அரசு அனுமதி அளித்தது.

அதன்படி மாவட்டத்திற்குள் கடந்த 1-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வருகிற 7-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து நடைபெற உள்ளது. இதற்காக மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 85 பஸ்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் அரசு அறிக்கை வந்த பிறகுதான் நாகர்கோவிலில் இருந்து எத்தனை பஸ்கள் இயக்கப்படும் என்பது தெரிய வரும் என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து பேசினர். அப்போது வருகிற 7-ந் தேதி முதல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story