விழுப்புரத்திற்கு 9-ந் தேதி முதல்-அமைச்சர் வருகை: முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் - அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை
விழுப்புரத்திற்கு 9-ந் தேதி முதல்-அமைச்சர் வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) வருகை தந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
முன்னதாக அவர், ஏற்கனவே முடிவடைந்துள்ள கட்டிட பணிகளை திறந்து வைப்பதுடன், பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி கலந்துரையாடுகிறார்.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதுபோல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதையும் அழகுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
இப்பணிகளை நேற்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் வருகைக்கான ஏற்பாடுகள், கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாவட்டத்தில் இதுவரை முடிவுற்ற திட்டப்பணிகள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்குவது குறித்தும் விரிவான ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story