வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் மாணவ- மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகின்றனர் கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் மாணவ- மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
வேலூர்,
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சன்பீம்பள்ளி, கிங்ஸ்டன் சர்வதேச அகாடமி, பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்வரம் மேல்நிலைப்பள்ளி, திருமலைக்கோடி ஸ்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளி, ஸ்பார்க் மெட்ரிக்பள்ளி, சாய்நாதபுரம் டி.கே.எம். பெண்கள் கல்லூரி, வி.வி.என்.கே.எம். மேல்நிலைப்பள்ளி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி ஆகிய 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த மையங்களில் 6 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 11 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வருகை தர வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு செல்ல வசதியாக வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து காட்பாடி, கே.வி.குப்பம், அரியூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் தேர்வர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். மாணவர்கள் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் தேர்வு நாளன்று 0416-2258016, 2258019 ஆகிய தொலைபேசி, 9154153692 செல்போன் ஆகியவற்றின் மூலம் கட்டுப்பாட்டு மையத்தினை தொடர்பு கொள்ளலாம். தேர்வர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களின் தேவைக்காக டீ, காபி, பிஸ்கெட் உள்ளிட்ட உணவுபொருட்கள் விற்பனை செய்ய தற்காலிகமாக கூடுதல் கடைகளை தேர்வு மையம் அருகே வைத்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story