அணைக்கட்டு தாலுகாவில் ரூ.4½ கோடியில் பள்ளி கட்டிட பணிகள் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு
அணைக்கட்டு தாலுகாவில் ரூ.4½ கோடியில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிட பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் பொதுப் பணித்துறைசார்பில் ரூ.4 கோடியே 63 லட்சம் மதிப்பீடடில் பள்ளி கூடுதல் கட்டிடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகம், கழிப்பிடம், சுற்றுச்சுவர், வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது விரிஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறை, ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் தனித்தனியே கழிப்பறை கட்டும் பணி, ஆழ்துளை கிணறு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
அதைத் தொடாந்து அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் 6 வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வகம், கழிப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர், குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டு கட்டிடத்திற்கு பயன்படுத்தும் செங்கல் மணல், கம்பிகள் தரமாக உள்ளதா என பரிசோதனை செய்தார். செங்கல் மட்டும் தரம் இல்லாமல் இருந்ததால் அதை அகற்றிவிட்டு தரமான செங்கல்லை பயன்படுத்தவேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். மேலும் கட்டிட பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சோழவரம் அரசு பள்ளியில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறை, கழிப்பறை கட்டிடம், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி மற்றும் அறிவியல் ஆய்வகம் ஆகிய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். 75 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் கட்டிடங்களின் நீளம், அகலம், உயரங்களை அளவீடு செய்தார்.
தொடர்ந்து சோழவரம் கிராம பொதுமக்களின் குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். எஸ்.ஆர்.எம். நகர் பகுதியில் ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம்., உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, பொறியாளர்கள் மலர்செல்வி, பழனி, வேலூர் தாசில்தார் ரமேஷ், மற்றும் தலைமை ஆசிரியர் ஜெகன்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story