புதுக்கோட்டை அருகே பரிதாபம்: மனநலம் பாதித்த மகளை கொன்று தந்தை தற்கொலை பராமரிக்க ஆளில்லாததால் விபரீத முடிவு
புதுக்கோட்டை அருகே மனநலம் பாதித்த மகளுக்கு ஆம்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் கிழக்கு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா(வயது 75). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரு மகன்களும், சாந்தி (45) என்ற மகளும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஒரு மருமகள் மட்டும் இங்கேயே வசித்து வருகிறார்.
சாந்தி மனவளர்ச்சி குன்றியவர். அதனால் தந்தையும், மகளும் பனங்குளம் கிராமத்தில் வசித்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக செல்லையாவுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. அருகில் வசிக்கும் மருமகள் கொடுக்கும் உணவை இருவரும் உண்டு நாட்களை கடத்தி வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக செல்லையாவிற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தன்னை அருகில் இருந்து பராமரிக்க ஆளில்லாததால் செல்லையா கவலை கொண்டுள்ளார். இதனால், தனது உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டார். தான் இறந்தபிறகு மனநலம் பாதித்த மகளும் வாழ கஷ்டப்படுவார் என்பதால் அவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை தனக்கும், மகளுக்கும் வைக்கப்பட்டிருந்த உணவோடு ஆம்லெட் இருப்பதை பார்த்த செல்லையா அதில் விஷத்தை கலந்து மகள் சாந்திக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டார். பின்னர் இருவரும் வீட்டில் படுத்துள்ளனர். சற்று நேரத்தில் சாந்திக்கு வயிற்று வலி ஏற்பட்டு சத்தம் போட்டதை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது இருவரும் விஷம் சாப்பிட்டதால் வாந்தி எடுத்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர். உடனே அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தந்தையும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதித்த மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story