திருச்சி கோவிலில் பார்வையற்ற பட்டதாரி காதல் ஜோடி திருமணம்
பார்வையற்ற காதல் ஜோடி, மனதால் ஒன்றிணைந்து திருச்சி கோவிலில் திருமணம் முடித்தனர்.
திருச்சி,
திருச்சி அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (வயது 28). பி.ஏ. படித்த இவர், கண்பார்வையற்றவர். ஜெயப்பிரியா ஊர் ஊராக சென்று கைவினைப்பொருட்களை விற்பனை செய்து வந்தார். தஞ்சாவூருக்கும் அடிக்கடி கைவினைப்பொருட்களை அவர் விற்பதற்காக சென்று வருவது வழக்கம்.
தஞ்சாவூர் அய்யம்பேட்டை சேர்ந்தவர் பாரதி (30). ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்த இவரும், பிறவியிலேயே கண்பார்வையற்றவர் ஆவார். கைவினைப்பொருட்களை தஞ்சாவூருக்கு அடிக்கடி விற்பனைக்காக எடுத்து சென்ற ஜெயப்பிரியாவுக்கும், பாரதிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலான வார்த்தைகளை பேசி, மனதால் ஒன்றிணைந்தனர். இவர்களின், காதலுக்கு மதிப்பளிக்கும் வகையில் குடும்பத்தாரும் திருமணம் செய்து வைக்கும் முடிவுக்கு வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதமே இருவரும் திருமணம் செய்யும் முடிவில் இருந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கால் திருமணமும் தள்ளிப்போனது. தற்போது ஊரடங்கில் பெரிய அளவில் அரசு தளர்வு செய்து அறிவித்ததால் இயல்பு நிலை திரும்பியது. எனவே மீண்டும் திருமணம் ஏற்பாடுகள் நடந்தது.
இந்த நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அம்மன் கோவில் ஒன்றில் நேற்று பாரதி-ஜெயப்பிரியா திருமணம் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.
திருமணம் முடிந்ததும் மணமகள் ஜெயப்பிரியா கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தஞ்சாவூரில் பாரதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது அன்பான பேச்சு, இருவரும் பார்வையற்றவர்கள் என்ற நிலையை மறந்து மனதால் இணைந்தோம். பின்னர் இருவரும் அன்பை பகிர்ந்து காதல் வசப்பட்டோம். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என பாரதியிடம் கேட்டபோது, அவர் உடனே சம்மதம் என்றார். இனி எந்த கஷ்டம் வந்தாலும் நான் அவருக்காகவும், அவர் எனக்காகவும் உயிர்வாழ்வது என உறுதியான நிலைப்பாட்டை எடுத்தோம். பார்வையற்ற தம்பதியான எங்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு வேலைவாய்ப்பு வழங்க ஆவன செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்‘என்றார்.

Related Tags :
Next Story