போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு பிரபல கன்னட-தமிழ் திரைப்பட நடிகை ராகிணி திவேதி அதிரடி கைது
போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக பிரபல கன்னட, தமிழ் திரைப்பட நடிகை ராகிணி திவேதி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் போதைப்பொருட் கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர்.
போதைப்பொருள் பயன்பாடு
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் கன்னட திரை உலகத்தை சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது பற்றியும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் கன்னட திரை உலகில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதையடுத்து, கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்துவது மற்றும் வியாபாரிகளுடன் தொடர்பில் இருப்பது குறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் கன்னட திரை உலகில் உள்ள நடிகர், நடிகைகள், இளம் இசையமைப்பாளர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும், விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
நடிகையின்நண்பர் கைது
அதைத்தொடர்ந்து, இயக்குனர் இந்திரஜித் லங்கேசிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து கன்னட மற்றும் தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர், மற்றொரு நடிகையான சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், ஓட்டல் அதிபர் கார்த்திக் ராஜ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இவர்களில் நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர் பெங்களூரு ஜெயநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார். ரவி சங்கர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகை ராகிணி திவேதியும், ரவி சங்கரும் திருமணம் செய்து கொள்ளலாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இதற்காக ராகிணி திவேதிக்கு ரவி சங்கர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணைக்கு ஆஜராகவில்லை
அதே நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் விவகாரத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ராகிணி திவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் உடல் நலக்குறைவை காரணம் காட்டி நேற்று முன்தினம் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக ராகிணி திவேதி காலஅவகாசம் கேட்டு இருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த போலீசார், நேற்று காலை 10 மணிக்கு கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மற்றொரு சம்மன் அனுப்பினார்கள்.
இதற்கிடையில், கைதான ரவிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் நடிகை ராகிணி திவேதி கலந்து கொண்டு இருந்தது பற்றி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. மேலும் ராகிணி திவேதி தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது பற்றிய தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நடிகை ராகிணி திவேதியின் வீட்டில் சோதனை நடத்த கோர்ட்டில் போலீசார் அனுமதி வாங்கினார்கள்.
நடிகை வீட்டில் சோதனை
இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பெங்களூரு எலகங்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடிகை ராகிணி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக் தலைமையில் 6 போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது நடிகை ராகிணி திவேதி வீட்டில் தான் இருந்தார். இதையடுத்து, அவர் பயன்படுத்தி வந்த 4 செல்போன்கள், 2 மடிக்கணினிகளை போலீசார் கைப்பற்றினார்கள். அவரது வீட்டில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ராகிணி திவேதியின் வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான எந்த ஆவணங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவரது வீட்டில் 3 மணிநேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்ததால், எலகங்காவில் உள்ள வீட்டில் இருந்து கார் மூலமாக சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு நடிகை ராகிணி திவேதி அழைத்து செல்லப்பட்டார்.
போலீஸ் தீவிர விசாரணை
அங்கு வைத்து உதவி போலீஸ் கமிஷனர் கவுதம், இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நண்பர் ரவி சங்கர் கூறிய தகவல்கள் குறித்து ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ராகிணி திவேதிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்கள், மடிக்கணினிகளையும் போலீசார் ஆய்வு செய்தார்கள்.
நேற்று காலையில் இருந்து மாலை வரை அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது சினிமா பிரபலங்கள் சார்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகிணி திவேதி போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான சில ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில், கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும், நடிகை ராகிணி திவேதியும் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ரவி சங்கர் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரையும் கைது செய்திருப்பதாகவும், நடிகை ராகிணி திவேதி உள்ளிட்டோர் மீது போலீசார் தாமாக முன்வந்து காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்தார்.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகத்தை சேர்ந்த மேலும் சில நடிகர், நடிகைகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ராகிணி திவேதி கைது
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலையில் இருந்து மாலை வரை நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலையில் நடிகை ராகிணி திவேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராகிணி திவேதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை காணொலி காட்சி மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.
மேலும் ராகிணி திவேதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது போதைப்பொருள் விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சந்தீப் பட்டீல் தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னட திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிமிர்ந்து நில்
கதாநாயகி
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதி கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். அவர் கன்னடத்தில் ராகிணி ஐ.பி.எஸ். சிவம், கெம்பேகவுடா, வீரமதகரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
தமிழில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்த நிமிர்ந்து நில் படத்தில் ராகிணி திவேதி கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story