திருப்பரங்குன்றம் அருகே, 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தாத்தா-மாமா கைது
திருப்பரங்குன்றம் அருகே 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாத்தா, மாமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு ஒரு மகளும், மகளும் உள்ளனர். இவரது மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த குழந்தையுடன் அந்த பெண் தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குழந்தைக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது அந்த குழந்தையின் தாத்தா, மாமா ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியபோது அவர் தன் தந்தை, தம்பியை கண்டிக்காமல் இந்த விஷயத்தை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். மேலும் குழந்தை என்று பாராமல் உடலில் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் அந்த குழந்தையின் பாட்டி மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 வயது குழந்தையை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில் பாலியல் தொந்தரவு செய்ததாக குழந்தையின் தாத்தா, மாமா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.
3 வயது பெண் குழந்தைக்கு தாத்தா, மாமா ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story