அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Sept 2020 3:45 AM IST (Updated: 5 Sept 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி, மாவட்ட ஊராட்சி செயலாளர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அறிவழகன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் அந்தந்த துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயனாளிகளுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் குறித்தும் அந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார்கள்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மானிய நிதிக்குழுவின் மானியதொகை ரூ.1 கோடியே 40 லட்சத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் பதிலளித்து பேசுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்படும். இதுதொடர்பாக ஆய்வு மேற்காள்ள அடுத்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அழைக் கப்படுவார்கள். நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து கலெக்டரின் அனுமதியை பெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.

Next Story