நெல்லையில் மழையில் ஒழுகும் ரேஷன் கடை நனைந்து போகும் சீனி, அரிசி மூட்டைகள்
நெல்லை மழையில் ஒழுகும் ரேஷன் கடையால், சீனி, அரிசி மூட்டைகள் நனைந்து வீணாக போகின்றன.
நெல்லை,
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வார்டிலும் குப்பைகளை சேகரித்து அதை உரமாக்க மிகப்பெரிய கூடங்களும் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் உணவு தானிய வினியோகத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சமீபத்தில் அம்பை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் பெய்த மழையால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன.
இந்த நிலையில் நெல்லையில் ரேஷன் கடையின் மேற்கூரை ஒழுகுவதால் சீனி, அரிசி மூட்டைகள் நனைந்து வீணாகின்றன. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள கட்டிடத்தில் நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
சிறிய அளவிலான பழமையான இந்த கட்டிடத்தில் குறைந்த அளவே அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்டவை இருப்பு வைக்க முடியும். ஆனால் 1 மாதத்துக்கு 22 டன் அளவுக்கு மேல் சரக்கு தேவைப்படுகிறது. இந்த கட்டிடத்தின் மேல் கட்டை மற்றும் செங்கலால் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது மேல் தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் 6 மூட்டைகள் சீனி நனைந்து கட்டிப்பிடித்தது.
இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது. எனவே கடையை நல்ல கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொது மக்களும், கடை ஊழியர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்துக்கு இந்த கடையை மாற்ற அனுமதி கோரி பலமுறை மனுக்களும் கொடுத்துள்ளனர். இல்லை என்றால் வாடகை கட்டிடத்துக்கு மாற்றி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று சிந்துபூந்துறை, செல்வி நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story