செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 6 Sept 2020 5:05 AM IST (Updated: 6 Sept 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த 3 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காந்தி நகரை சேர்ந்த 45 வயது பெண், நந்திவரம் பெரிய தெருவை சேர்ந்த 25 வயது இளம்பெண், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி போன்ற பகுதியை சேர்ந்த 33 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பேரமனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 21 வயது வாலிபர், யூனியன் சாலையை சேர்ந்த 20 வயது வாலிபர், மேட்டுத்தெருவை சேர்ந்த 64 வயது மூதாட்டி, 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 947 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 764 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 729 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 35, 30, வயதுடைய ஆண்கள், சோமங்கலம் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 30, 32, வயதுடைய பெண்கள் மற்றும் 46, 33, 31, 53, வயதுடைய ஆண்கள் ஒரகடம் சென்னகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இத்துடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 419 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது. 1,443 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 244 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 26 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 186 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,457 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 428 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story