இந்தி சினிமா இயக்குனர் ஜானி பக்சி மரணம்
இந்தி சினிமா இயக்குனர் ஜானிபக்சி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மும்பை,
இந்தி திரைப்படவுலகின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குனராக இருந்து வந்த ஜானி பக்சி. அவருக்கு வயது82. நேற்று முன்தினம் காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து ஜூகுவில் உள்ள ஆரோக்யநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவர் இந்த திரையுலகில் நான்கு சகாப்தம் கண்ட தயாரிப்பாளர் ஆவார். இவர் தயாரித்த ‘மன்சிலேம் அவுர் பி ஹை’, ‘ராவன்’, ‘பிர் தேரி காகானி யாத் ஆயே’ ஆகிய படங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இவர் இயக்கிய படங்களான டாக்கு அவுர் போலீஸ், குதாய், ஆகிய படங்களில் ராஜேஷ் கண்ணா கதாநாயகனாக நடித்து உள்ளார்.
உயிரிழந்த ஜானி பக்சிக்கு பிரண்டோ, கென்னடி, பிராட்மேன் ஆகிய 3 மகன்களும், மகள் பிரியா உள்ளனர். இவரது மறைவிற்கு டுவிட்டரில் நடிகர் அனுபம்கேர், திரைப்பட தயாரிப்பாளர் குணால் கோலி, மகேஷ் பட், அமித்கண்ணா, உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story