கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அடுத்த 3 மாதங்கள் சவால் மிகுந்ததாக இருக்கும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அடுத்த 3 மாதங்கள் சவால் மிகுந்ததாக இருக்கும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வார்டு அதிகாரிகள் மற்றும் துணை கமிஷனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது முதல்-மந்திரி மும்பையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு தொற்று பரவலை கட்டுப்படுத்துவது நிர்வாகத்துக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறினார். மேலும் கூட்டத்தில் முதல்-மந்திரி கூறியதாவது:-
தினமும் 1,000 முதல் 1,100 பேர் பாதிக்கப்பட்ட போது வைரஸ் பரவல் உச்சத்தில் இருப்பதாக நினைத்தோம். ஆனால் கடந்த 2 நாட்களாக 1,700 முதல் 1,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அடுத்த 3 மாதங்கள் சவால் நிறைந்ததாக இருக்கும். அதை நாம் சாமர்த்தியமாக எதிர்கொள்ள வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரை 48 மணி நேரத்தில் கண்டறிந்து சோதனை செய்வது மிகவும் அவசியமாகும். குணமான சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு இருப்பதை காணமுடிந்தது. இது அதீத மருந்து அல்லது கொரோனாவால் ஏற்படுகிறதா என்பதை நாம் சோதிக்க வேண்டும்.
கொரோனா பிரச்சினை காரணமாக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மும்பையில் கூடுதலாக 5 முதல் 6 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்ய முடியும். அதற்கான ஆக்சிஜன் மற்றும் அவரச சிகிச்சை படுக்கை வசதிகளுக்கு நிர்வாகம் திட்டமிட வேண்டும். இவ்வாறு முதல் -மந்திரி கூறினார்.

Related Tags :
Next Story