மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்க போர்க்கால நடவடிக்கை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அண்ணாமலை நகர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக ஆய்வு பணியில் ஈடுபட்டார். அதன்படி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வருகை தந்தார். மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பிரசவ வார்டுக்கு சென்ற அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைககள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், மாவட்ட குடும்பத்நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர்(பொறுப்பு) ரவி, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளேன். கொரோ னா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரேனா வார்டில் 50 படுக்கை வசதிகள் உள்ளது. இதில் 44 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருதத்துவமனைகள் மற்றும் கொரேனா சிறப்பு வார்டுகளில் நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் இங்கு 956 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று 303 பேர் குணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் கனிசமாக உயர்ந்துள்ளன. இந்த மருத்துவமனையில் மாதத்திற்கு 400 பிரசவங்கள் நடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 57 பேருக்கும் பிரசவங்கள் நடந்துள்ளது. இது பாராட்டத்தக்க விஷயம். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது மனநிறைவை தருகிறது. இந்த மருத்துவமனைக்கு புதிய நவீன கட்டிடங்கள் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது கண்டிப்பாக பரிசீலனை செய்யப்படும்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்கனவே அரசு சார்பில் 1¾ கோடி ரூபாயில் ஏற்கனவே சி.டி.ஸ்கேன் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதே போல் ஆஞ்சியோ சிகிச்சைக்காக கேத் லேப் வழங்கப்படும். மேலும் பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்த வங்கி அமைக்க தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 1 லட்சத்து 29 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 6,000 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அண்ணாமலைநகரில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி விடுதியான கோல்டன் ஜூப்ளி விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து ம்கேட்டறிந்தார்.
முன்னதாக நேற்று காலை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் பொது தீட்சிதர்கள் வரவேற்பு அளித்து கோவிலுக்குள் அழைத்து சென்றனர். கோவில் கனகசபையில் நின்றபடி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்தார். அமைச்சருடன் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story