அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கியது
அரியலூர் ரெயில் நிலையத்தில் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
தாமரைக்குளம்,
கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை (7-ந்தேதி) முதல் மாவட்டங்களுக்கிடையேயான பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து இயக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு தமிழகஅரசு கேட்டுக்கொண்டதின் பேரில் நிறுத்தப்பட்ட 5 சிறப்பு ரெயில்களும் மற்றும் சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரெயில், சென்னை - கோவை வரை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டி, கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி, முத்துநகர் அதிவிரைவு வண்டி, நீலகிரி அதிவிரைவு வண்டி, சிலம்பு அதிவிரைவு வண்டி உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்தது.
இதையடுத்து அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்பதிவு அலுவலகமும் நேற்று செயல்படத் தொடங்கியது. இந்த ரெயில் நிலையம் மார்க்கமாக செல்லும் ரெயிலுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து காலை முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் முன்பதிவு மையங்களில் சென்று ரெயில் டிக்கெட் எடுத்துச் சென்றனர். முக்கியமாக, எங்கிருந்து சென்றாலும், சேரும் இடத்தின் முகவரி கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி கூடுதலாக ரெயில் டிக்கெட் முன்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story