சேங்கல் மலை அருகே 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
சேங்கல் மலை அருகே 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் சேங்கல் மலை அருகே துண்டு பெருமாள் பாளையத்தை சேர்ந்தவர் ராசாயி அம்மாள் (வயது 70). இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.
சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சுமார் 20 அடி தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள் விழுந்த ஆடு தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தது. இதைபார்த்த ராசாயி அம்மாள் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை.
பின்னர் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் கயிற்றின் மூலம் இறங்கி ஆட்டை கயிற்றால் கட்டி மேலே இழுத்து உயிருடன் மீட்டனர். தங்களது உயிரை பொருட்படுத்தாமல் கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Tags :
Next Story