உப்பிலியபுரம் அருகே பரிதாபம்: 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை
உப்பிலியபுரம் அருகே 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 30). லாரி டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). இவர்களின் மகன் கமலேஷ் (2). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். வேல்முருகன் தனது மனைவி, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 15-ந்தேதி வேல்முருகன் தர்மபுரிக்கு வேலைக்காக சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள குளியலறைக்கு தனது மகனுடன் சென்ற ரஞ்சனா, கதவை தாழிட்டு கொண்டார். பின்னர் தனது உடலிலும், மகனின் உடலிலும் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் இருவர் உடலிலும் தீ பற்றி எரிந்தது. வலியால் அவர்கள் அலறி துடித்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து குளியலறையின் தாழ்ப்பாளை உடைத்து பார்த்தனர்.
அப்போது தாய், மகன் இருவரும் எரிந்து கொண்டிருந்தனர். உடனே தீயை அணைத்து தாய், மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே குழந்தை கமலேஷ் பரிதாபமாக இறந்துவிட்டான். ரஞ்சனா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தர்மபுரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சனாவின் கணவர் வேல்முருகனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து வேல்முருகன் மற்றும் ரஞ்சனாவின் மாமனார், மாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஞ்சனா, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
````````
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தார்:
கறம்பக்குடி வாலிபர் சிங்கப்பூரில் தற்கொலை
உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
கறம்பக்குடி,
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்ததால் சிங்கப்பூரில் இருந்த கறம்பக்குடி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவருடைய மகன் சந்துரு என்ற சந்திரசேகரன்(வயது 28). இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றார். 5 மாதங்கள் அங்கு வேலை பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அவர் வேலை இழந்தார்.
கடன் வாங்கி வெளிநாடு சென்ற நிலையில் வேலை இல்லாததால் அவர் மனமுடைந்தார். இது குறித்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் வருத்தத்துடன் போனில் பேசியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள், சந்துருவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழ்மை நிலையில் உள்ள சந்துருவின் குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்ப வறுமையை போக்க வெளிநாடு சென்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story