மயிலாடுதுறை அருகே, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


மயிலாடுதுறை அருகே, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Sept 2020 3:45 AM IST (Updated: 8 Sept 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் மேலவெளி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சண்முகப்பிரியா(வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து வந்தார். சண்முகப்பிரியா தான் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி பெண் என்பதை மறந்து தினமும் அந்த தெருவில் உள்ள குழந்தைகளுடனும், சிறுவர்களுடனும் விளையாடி பொழுதை போக்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு திருமண செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து இருந்தனர். திருமணம் நிச்சயம் செய்த பின்னரும் சண்முகப்பிரியா குழந்தைகளுடனும், சிறுவர்களுடனும் விளையாடி பொழுதை போக்கி வந்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர், சண்முகப்பிரியாவை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா, சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்ட அவரது பெற்றோர் சண்முகபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர்களுடன் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story