குடியாத்தம் அருகே, 3 அடி உயர அம்மன் சிலை திருட்டு - போலீஸ் விசாரணை


குடியாத்தம் அருகே, 3 அடி உயர அம்மன் சிலை திருட்டு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Sept 2020 4:00 AM IST (Updated: 8 Sept 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே 3 அடி உயர அம்மன் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி கல்மடுகு கிராமத்தில் ஆலமர தெரு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மாரியம்மன் சிலையை வைத்து அப்பகுதி பொது மக்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சிறிய அளவிலான மாரியம்மன்கோவிலை கட்டினர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கோவில் மாரியம்மன் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு தினமும் பொதுமக்கள் காலையிலும், மாலையிலும் கோவிலில் மாரியம்மனை வழிபட்டு வந்தனர். சிலையின் கழுத்தில் ஒரு கிராம் அளவிலான தங்கத்தாலி பொதுமக்கள் சார்பில் அணிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலையில் பொதுமக்கள் பார்த்தபோது மாரியம்மன் கோவிலில் இருந்த 3 அடி உயர மாரியம்மன் கல்சிலை காணாமல் போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள நிலங்களிலும், புதர்களிலும் மாரியம்மன் சிலை கிடக்கிறதா? என தேடிபார்த்தனர். ஆனால் சிலை கிடைக்கவில்லை.

சிலையை மர்மநபர்கள் கடத்திச்சென்றிருக்கலாம் என்று கருதிய பொதுமக்கள் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story