மாவட்ட செய்திகள்

12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார் + "||" + Best Author Award for 12 Authors - Presented by Collector Veeravarao

12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதினை ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலெக்டர் வீரராகவராவ் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து விழாவில் கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவிடுகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது ஒவ்வொரு ஆசியர்களின் கனவு விருதாகும். நடப்பாண்டில் இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நவாஸ்கனி எம்.பி., மணிகண்டன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் திசைவீரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் திருமதி கல்பனாத்ராய், மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, கருணாநிதி, முருகம்மாள் உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் கலெக்டர் ஆய்வு
தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
2. மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்து தற்போது 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
3. ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மின்னணு விற்பனை கருவிகள் வினியோகம் - கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்
பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளை ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
4. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மையத்தில் கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு நடத்தினார்.
5. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 264 பேருக்கு புதிய வீடுகள் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 264 பேருக்கு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்து உள்ளார்.