எலபுர்கா தாலுகாவில் சம்பவம் மான், புலிகளை வேட்டையாடி தோல்களை விற்ற 6 பேர் சிக்கினர்
எலபுர்கா தாலுகாவில், மான் மற்றும் புலி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி தோல்களை விற்று வந்த 6 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கொப்பல்,
கொப்பல் மாவட்டம் எலபுர்கா தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. வனத்துறையினரை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை கைப்பற்றி வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த மூட்டைகளில் மான் இறைச்சி, பயங்கர ஆயுதங்கள் ஆகியவை இருந்தன. மேலும் மான் தோல்கள் மற்றும் கொம்புகளும் இருந்தன. இதையடுத்து அந்த 6 பேரிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்கள்
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது அவர்கள் எலபுர்கா தாலுகா உனசிஹாலா கிராமத்தைச் சேர்ந்த துக்கப்பா, சரணப்பா சவுகான், மல்லய்யா ஹிரேமட், சிவய்யா ஹிரேமட், சங்கப்பா கட்டிமணி, அனுமந்தா கட்டிமணி ஆகியோர் என்பதும், அவர்கள் வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மான், காட்டுயானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி கொன்று அவற்றின் இறைச்சி, தோல், கொம்புகள், தந்தங்கள், பற்கள் உள்ளிட்டவற்றை விற்று வந்தது தெரியவந்தது.
குறிப்பாக மான், சிறுத்தை, புலி ஆகியவற்றின் தோல்களை தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர். அதில் பெங்களூரு, மங்களூருவில் வசித்து வரும் தொழில் அதிபர்களுக்கே அதிக அளவில் வனவிலங்குகளின் தோல்களை விற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மான் கொம்புகள், மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் தோல்கள் ஆகியவற்றை வனத்துறையினர் மீட்டனர். மேலும் பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story