ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் - ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் கைது
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஜங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் மல்லகுண்டா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ராணுவ வீரர் ராஜீவ் (36), ராமச்சந்திரன் (35), ராஜ்குமார் (29), பார்த்தீபன் (35) மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சக்கி ஆகியோருடன் திருப்பத்தூர் அருகே ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றனர்.
அப்போது 6 பேரும் மது அருந்திவிட்டு குடிபோதையில் அங்கு வந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கு குளித்துவிட்டு உடை மாற்றி கொண்டிருந்த பெண்களிடம் தகராறு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெருமாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் விரைந்து சென்று குடிபோதையில் பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர், ராணுவ வீரர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) முனீர் ஒழுங்கிண்மையாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story