நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குமரியில் 225 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் ஏராளமானவர்கள் பங்கேற்பு
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குமரி மாவட்டத்தில் 225 இடங்களில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்திலும் தி.மு.க. இளைஞரணியினர் மற்றும் மாணவரணியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் எம்.ஜே.ராஜன், ராஜேஷ்குமார், சோமு, முருகப்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் நடந்த போராட்டத்துக்கு இளைஞர் அணி நகர துணை அமைப்பாளர் வளர் அகிலன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மறைந்த தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் முகமூடிகளை அணிந்து பங்கேற்றனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டையையும் கையில் பிடித்து கோஷங்களை எழுப்பினர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது, தலைமை கழக மாநில பேச்சாளர் குமரி மணிமாறன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சார்லஸ், மதுபாலன், மதி, பாலசுப்பிரமணியன், ஆனந்த் நவுபல் அஸ்கர் என பலர் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தென்தாமரைகுளம் பஞ்சாயத்து அலுவலக சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பொன்.ஜாண்சன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், நாஞ்சில் ஜோனிமோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஒன்றிய பிரதிநிதி ஜான் கிறிஸ்டோபர், நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் கணேசபுரம், கிருஷ்ணன்கோவில், பள்ளிவிளை, தளவாய்புரம், வாகையடிதெரு, ரெயிலடிதிடல் உள்பட 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் நேற்று தி.மு.க. இளைஞரணி சார்பில் 50 இடங்களிலும், மாணவரணி சார்பில் 50 இடங்களிலும் ஆக மொத்தம் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுபோல், எட்டணி, கீழ்குளம், மத்திகோடு என மேற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட 125 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததாக இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம் குமார் கூறினார்.

Related Tags :
Next Story