பணியின்போது இறந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் உறவினர்கள் சாலை மறியல்
பணியின்போது இறந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்,
அரியலூர் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் மின்மாற்றியில் வேலை செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள அவரது சகோதரி மகாலட்சுமிக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும், இல்லையென்றால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட காமராஜின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, அவருடைய உறவினர்கள் நேற்று அரியலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் மற்றும் தாசில்தார் சந்திரசேகரன் ஆகியோர் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்களை பேச்சுவார்த்தைக்காக அரியலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கயர்லாபாத் ராஜா, திருமானூர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில், காமராஜின் உறவினர்களிடம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முடிவில், மின்சார வாரியத்தில் பணியின்போது உயிரிழப்புக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சுமார் ரூ.3 லட்சத்தை பெற்றுத்தருவதாகவும், அவரது சகோதரிக்கு வேலை தொடர்பாக அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காமராஜின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே மறியலை கைவிட்ட மற்றவர்கள், சாலையோரத்தில் திரண்டு நின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story