மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற ஊராட்சி பணியாளர் திடீர் சாவு - பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை


மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற ஊராட்சி பணியாளர் திடீர் சாவு - பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Sept 2020 5:00 PM IST (Updated: 9 Sept 2020 4:55 PM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்ற ஊராட்சி பணியாளர் மயக்கமடைந்து திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்தி வேலூர்,

பரமத்தி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50). இவர் பரமத்தி ஒன்றியம் பிள்ளைகளத்தூர் ஊராட்சியில் தண்ணீர் திறந்து விடும் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் மகேஷ் (31) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பரமத்தி அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது மயக்கம் வருவதாக மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்று கொண்டிருந்த மகேஷிடம் கூறியுள்ளார். மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது அண்ணாதுரை மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை நண்பர் மகேஷ் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அண்ணாதுரையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story