தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி வீடுகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி வீடுகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2020 10:00 PM IST (Updated: 9 Sept 2020 9:57 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை தொடர்ந்து நடைமுறை படுத்தக்கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடி,

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு முறையை அமல்படுத்தக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் பல்வேறு இடங்களில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தேவகோட்டையில் சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கருப்புக்கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்கம்புணரியில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரிசேகர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மனோகரன், நகர இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத், துணை அமைப்பாளர் இளவரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மானாமதுரை யூனியன் தலைவர் லதாஅண்ணாத்துரை தலைமையில் அண்ணாசிலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் நகர் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் அவரது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர துணைச்செயலாளர் பாலசுந்தரம், நகர் மாணவரணி செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். இளையான்குடி மேற்கு ஒன்றியத்தில் குமாரக்குறிச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபு, செந்தமிழ் நகரில் துணை அமைப்பாளர் சங்கர் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் அன்பரசன் முன்னிலையிலும், இளமனூரில் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், இளையான்குடியில் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பைரோஸ்கான் தலைமையிலும், பேரூர் செயலர் நஜீமுதின் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story