5 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது - பயணிகள் மகிழ்ச்சி
5 மாதங்களுக்கு பிறகு நேற்று கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
நாகர்கோவில்,
கொரோனா பரவலை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் மண்டலங்களுக்கிடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டு, சில நாட்களில் நிறுத்தப்பட்டன. தற்போது அமலில் உள்ள 8-ம் கட்ட ஊரடங்கில் ரெயில்களை இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் இன்டர்சிட்டி மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. இதில் பயணிகள் உற்சாகத்துடன் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். இந்த சிறப்பு ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி இந்த ரெயில் நேற்று காலை 7.30 மணிக்கு 604 பயணிகளுடன் நாகர்கோவிலுக்கு வந்தது.
ரெயில் நாகர்கோவிலை வந்தடைந்ததும், அதில் வந்த பயணிகள் அனைவரும் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாற்ற பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும் பிரதான வழியாக செல்லும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர்கள், முன்பதிவு பயணச்சீட்டை சரிபார்த்த பிறகு பயணிகளை வெளியே செல்ல அனுமதித்தனர்.
இதேபோல் இந்த சிறப்பு ரெயில் மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்டது. அதிலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த ரெயில் மாலை 5.25 மணிக்கு நாகர்கோவிலுக்கு வந்தது. இதில் முன்பதிவு செய்த 457 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கியதால் பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வந்த அனைவரது முகத்திலும் மிகுந்த சந்தோஷத்தை காண முடிந்தது. மேலும் பயணிகள் முககவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது ரெயில் பயணத்தை உற்சாகமாக சென்றனர்.
முன்னதாக ரெயில் நிலையம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

Related Tags :
Next Story