கர்நாடக மாநில கால்நடைத் துறை மந்திரி பிரபு சவுகானுக்குக் கொரோனா தொற்று


கர்நாடக மாநில கால்நடைத் துறை மந்திரி பிரபு சவுகானுக்குக் கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 Sep 2020 10:22 AM GMT (Updated: 10 Sep 2020 10:22 AM GMT)

கர்நாடக மாநில கால்நடைத் துறை மந்திரி பிரபு சவுகானுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்ரோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. 

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கர்நாடக மாநில கால்நடைத் துறை மந்திரி பிரபு சவுகானுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கால்நடைத் துறை மந்திரி பிரபு சவுகான், “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story