மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர் உள்பட 93 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர் உள்பட 93 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Sept 2020 5:15 PM IST (Updated: 10 Sept 2020 5:03 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வருவாய் ஆய்வாளர் உள்பட 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,888 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 2,795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ராசிபுரம் அரசு பள்ளி ஆசிரியை, திருச்செங்கோடு வருவாய் ஆய்வாளர், அத்தனூர் சுகாதார ஆய்வாளர் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ஊழியர், திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று நாமக்கல்லில் 20 பேர், ராசிபுரத்தில் 6 பேர், திருச்செங்கோட்டில் 10 பேர், குமாரபாளையத்தில் 7 பேர், பரமத்திவேலூர் மற்றும் குருசாமிபாளையத்தில் தலா 5 பேர் வீதம் 10 பேர், கோவிந்தம்பாளையம் மற்றும் நாமகிரிப்பேட்டையில் தலா 4 பேர் வீதம் 8 பேர், பரமத்தியில் 3 பேர், பச்சுடையாம்பாளையம், ஆண்டகளுர்கேட் மற்றும் பிள்ளாநல்லூரில் தலா 2 பேர் வீதம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சக்காரப்பட்டி, பெரியமணலி, பச்சுடையாம்பட்டி, கரட்டுப்பாளையம், காடச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் உள்பட 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,888 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 60 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,088 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 47 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 753 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story