உயிர்பலி வாங்க காத்திருக்கும் விளம்பர பேனர்களை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்


உயிர்பலி வாங்க காத்திருக்கும் விளம்பர பேனர்களை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Sept 2020 6:45 PM IST (Updated: 10 Sept 2020 6:36 PM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை பகுதியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் விளம்பர பேனர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை,

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் மற்றும் போர்டுகள் வைப்பதினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். கீழக்கரை முக்கு ரோட்டில் 4 மாதத்திற்கு முன்பு வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படாமல் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளன.

மேலும் கடந்த ஆண்டு சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விளம்பர பேனர் விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார். அதனை அடுத்து விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்கப்பட்டன. இந்தநிலையில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் விளம்பர பேனர்கள் மற்றும் போர்டுகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் சுய விளம்பரத்திற்காக பொதுமக்கள் நடமாடக்கூடிய இடங்களிலும் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் பேனர் மற்றும் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் வைக்கின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் மீது முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி நிர்வாகம் விளம்பர பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story