கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி நடந்தது


கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 11 Sept 2020 3:45 AM IST (Updated: 11 Sept 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி முன்பு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, சேகர், மாதவவேலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல மணலி கூட்டுறவு சங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பாலகுரு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் கதிரேசன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருத்தங்கூர் கூட்டுறவு வேளாண்மை பகுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் தம்புசாமி, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகானந்தம் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 2019-2020-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story