பரமத்திவேலூர் அருகே, கார் மோதி இன்சூரன்ஸ் ஏஜெண்டு பலி - டிரைவர் கைது


பரமத்திவேலூர் அருகே, கார் மோதி இன்சூரன்ஸ் ஏஜெண்டு பலி - டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2020 3:45 AM IST (Updated: 12 Sept 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே கார் மோதி மொபட்டில் சென்ற இன்சூரன்ஸ் நிறுவன ஏஜெண்டு பலியானார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கலைவாணி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54). இவர் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை நாமக்கல்லில் இருந்து தனது மொபட்டில் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் உள்ள தனது தாயை பார்க்க சென்றார்.

அப்போது கபிலர்மலை சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று சரவணனின் மொபட் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் இறந்தார்.

விபத்தில் உயிரிழந்த சரவணனனுக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், வர்ஷினி என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு கார் டிரைவர் மோகனூரை சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story