தனித்தனி சம்பவம்: மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி


தனித்தனி சம்பவம்: மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Sept 2020 4:15 AM IST (Updated: 12 Sept 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள மேல்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன் ஹரி(வயது 11). இவன், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ஹரி, விவசாய நிலத்தில் நடந்து சென்றான். அப்போது அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை அவன், தெரியாமல் மிதித்து விட்டான். இதில் மின்சாரம் தாக்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே பலியானான். இது பற்றி தகவல் அறிந்ததும் வெள்ளிமேடுபேட்டை போலீசார் விரைந்து சென்று, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள செமநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் அருள்குமார் (21). இவர், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள பால் ஏஜென்சியில் நேற்று சரக்கு வாகனம் மூலம் சென்று பாலை இறக்கி வைத்துவிட்டு வாகனத்தின் பின்பக்க கதவை மூடினார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள மின்மாற்றியில் கதவு பட்டது. இதில் அருள்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story