‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேனி,
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story