பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு தமிழக காரில் இந்திய தேசிய கொடியை கட்டிய போலீசார்
பெங்களூருவில், தமிழக பதிவெண் கொண்ட காரின் முன்பகுதியில் கட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டு கொடியை அகற்றிவிட்டு, இந்திய தேசிய கொடியை போக்குவரத்து போலீசார் பொருத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
பெங்களூரு,
இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து வித நடவடிக்கைகளும் தடைப்பட்டன. மேலும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கூட நடைபெறுவது இல்லை.
அவ்வப்போது காஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காரின் முன்பகுதியில் கட்டப்பட்டு இருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு இந்திய கொடியை போலீஸ்காரர்கள் கட்டிய சம்பவம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பாகிஸ்தான் கொடி அகற்றம்
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே வீரசந்திரா பகுதியில் நேற்று காலை எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தமிழ்நாட்டில் இருந்து ஒரு கார் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கவனித்த போக்குவரத்து போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் வந்த 2 பேரிடம் பாகிஸ்தான் கொடியை கட்டியது பற்றி கேட்டனர். ஆனால் அவர்கள் சரியாக பதில் எதுவும் சொல்லவில்லை.
இதையடுத்து இதுபோன்று பாகிஸ்தான் கொடியை கட்டி வர கூடாது என்று 2 பேருக்கும், போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர் இந்திய தேசிய கொடியை காரின் முன்பகுதியில் பொருத்திய போலீசார் அங்கிருந்து காரை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் போக்குவரத்து போலீசாரின் தேசபற்றுக்கு லைக் தெரிவித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story