நாமக்கல் மாவட்டத்தில், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 95 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3,210 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,210 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 3,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தை சேர்ந்த 3 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,115 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று திருச்செங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர், நாமக்கல் வணிகவரித்துறை உதவியாளர், தோளூர் அரசு பள்ளி ஆசிரியை, திருச்செங்கோடு தலைமை ஆசிரியர், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் உள்பட 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று நாமக்கல்லில் 15 பேர், குச்சிபாளையத்தில் 11 பேர், திருச்செங்கோட்டில் 9 பேர், குமாரபாளையத்தில் 8 பேர், ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூரில் தலா 7 பேர், பள்ளிபாளையத்தில் 5 பேர், அலவாய்பட்டியில் 4 பேர், மோகனூர், பேட்டபாளையம், மல்லசமுத்திரம் பகுதிகளில் தலா 2 பேர், சீராப்பள்ளி, கோனூர், அல்லிநாயக்கன்பாளையம், வள்ளியப்பம்பட்டி புதூர், அம்மாயிபாளையம், அலங்காநத்தம், செங்கோடகவுண்டன்பாளையம், கரிச்சிபாளையம், மாவுரெட்டிப்பட்டி, புதுச்சத்திரம், ஏளூர், ஒருவந்தூர், ஜங்களாபுரம், ஆனங்கூர், வெள்ளாளபாளையம், வெண்ணந்தூர், ஜேடர்பாளையம், கதிராநல்லூர், கைலாசம்பாளையம், பாப்பநாயக்கன்பட்டி, கருவேப்பம்பட்டி, ஆலாம்பாளையம் பகுதிகளில் தலா ஒருவர் மற்றும் மதுரையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,210 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,332 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 50 பேர் பலியான நிலையில், 828 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story