மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஊரடங்கால் வறுமை காரணமா? போலீசார் விசாரணை


மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஊரடங்கால் வறுமை காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Sept 2020 4:00 AM IST (Updated: 14 Sept 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஊரடங்கால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள குழிப்பாந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் குணசீலன் (வயது 26), இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. குணசீலன் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சில மாதங்களாக நிறுவனத்தில் வேலை இல்லாததால் குணசீலன் செலவுக்கு பணம் இல்லாமல் வறுமையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை தனது வீட்டைவிட்டு வெளியில் சென்ற குணசீலன் மாலை 4 மணி அளவில் அருகில் உள்ள எச்சூர் காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கொரோனா ஊரடங்கால் வறுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story