வியாசர்பாடி மேம்பாலத்தில் கொரோனா நோயாளியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது


வியாசர்பாடி மேம்பாலத்தில் கொரோனா நோயாளியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 14 Sept 2020 4:00 AM IST (Updated: 14 Sept 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடி மேம்பாலத்தில் கொரோனா நோயாளியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெரம்பூர், 

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொரோனா நோயாளியை அழைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் வந்தபோது மழை பெய்து இருந்ததால் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வாகனம், நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

நல்லவேளையாக ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் அதில் வந்த கொரோனா நோயாளி இருவருக்கும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி போக்குவரத்து போலீசார், இருவரையும் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

Next Story