கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்: திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மாவட்ட கலெக்டர் தகவல்
திறந்து விடப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் மூலம் வெள்ளமாக திரண்டு வந்து நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தை கடந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேற்றிரவு இரவு 9.30 மணி முதல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு தொடர் மழை இருப்பின் திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் திறந்து விடப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் மூலம் வெள்ளமாக திரண்டு வந்து நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தை கடந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அப்பகுதியில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.மேலும் இத்தகவல் வருவாய்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story