கொரோனா நோயாளிகளை கண்காணித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நவீன கருவி மூலம் சிகிச்சை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளை கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்க நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளை கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்க நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய வைபை கருவி நடைமுறைக்கு வந்துள்ளது
செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை விரைவில் குணப்படுத்தும் நோக்கில் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க ‘டோஷி’ எனப்படும் நவீன ஆக்சிஜன் கருவி நோயாளிகளின் படுக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் நோயாளியின் இதயதுடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. மேலும் இதை வை-பை மூலம் தொலைவில் இருந்தவாறு கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 25 நவீன கருவிகள் உபயோகத்தில் உள்ள நிலையில், மேலும் 25 கருவிகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கருவியில் நோயாளி படுக்கையில் இல்லாமல் இருந்தாலும் உடனே அலாரம் ஒலித்து காட்டி கொடுத்து விடும் வசதியும் உள்ளது.
அதேபோல இங்கு சிறப்பு ஆக்சிஜன் கருவிகள், அதிவேக பிராணவாயு கருவி, ஆக்சிஜன் ஹெல்மெட் போன்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கருவிகளின் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ. 7லட்சம் வரை இருக்கும் என்றும், இக்கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் குறையும் என ஆஸ்பத்திரி டீன் சாந்திமலர் கூறினார். மேலும் 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ கண்காணிப்பு அறையும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story