பெங்களூருவில், கொரோனாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவு - 2 மாதத்தில் பணி ஓய்வுபெற இருந்த நிலையில் சோகம்


பெங்களூருவில், கொரோனாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவு - 2 மாதத்தில் பணி ஓய்வுபெற இருந்த நிலையில் சோகம்
x
தினத்தந்தி 15 Sep 2020 9:30 PM GMT (Updated: 15 Sep 2020 9:20 PM GMT)

பெங்களூருவில், கொரோனாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இறந்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. வைரஸ் தொற்றால் போலீஸ்காரர்களும் உயிர் இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெங்களூருவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் இறந்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு வில்சன்கார்டன் போலீஸ் நிலையத்தில் 58 வயது நபர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த இன்ஸ்பெக்டர் பன்னரகட்டா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று இன்ஸ்பெக்டரின் உடலை பெற்று சென்று, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி அடக்கம் செய்தனர்.

கொரோனாவுக்கு இறந்த இன்ஸ்பெக்டர் இன்னும் 2 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வுபெற இருந்தார். அதற்குள் அவர் கொரோனா பாதிப்புக்கு இறந்து விட்டார். கொரோனா பாதிப்புக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் வில்சன்கார்டன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story