அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை


அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 Sep 2020 11:41 PM GMT (Updated: 15 Sep 2020 11:41 PM GMT)

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அண்ணாசாலையில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உப்பளத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, வையாபுரி மணிகண்டன், நிர்வாகிகள் அன்பானந்தம், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காக்காயந்தோப்பில் அண்ணாவின் உருவப்படத்துக்கு எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர் நடராஜன், முன்னாள் அவைத்தலைவர் குமரன், எம்.ஜி.ஆர். சிலை அமைப்புக்குழு செயலாளர் சரவணன், துணை செயலாளர் சுப்புராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், திராவிடமணி, சக்திவேல், பாண்டு அரிகிருஷ்ணன், கலியகார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பலராமன், பொருளாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், இணை செயலாளர் லாவண்யா, துணை செயலாளர் செல்வம், பொருளாளர் வீரப்பன், நகர செயலாளர்கள் பாஸ்கர், ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் எஸ்.டி.சேகர், பாவாடை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலான் தலைமையில் கட்சியினர் சுதேசி மில் அருகே இருந்து ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். அவர்கள் ‘இந்தி வேண்டாம் போடா’ என்ற வாசகங்கள் பொறித்த டி-சர்ட் அணிந்திருந்தனர்.

அண்ணா சிலை அருகே வந்து இந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். தொடர்ந்து சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.பி., செல்வநந்தன், எழில்மாறன், அலெக்சாண்டர், ஏகாம்பரம், செந்தில் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய நீதிக்கட்சியினர் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும், ம.தி.மு.க.வினர் பொறுப்பாளர் கபிரியேல் தலைமையிலும், திராவிடர் கழகத்தினர் மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையிலும், அண்ணா பேரவையினர் மாநில அமைப்பாளர் சிவ.இளங்கோ தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் தி.மு.க. சார்பில் நடந்த விழாவில் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் புதுவை மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், மீனவர் அணி முன்னாள் அமைப்பாளர் தேவநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story