மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + Political parties in the district paid homage to the Anna statue by wearing garlands

மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில், நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில், கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தி.மு.க. சார்பில் நகர செயலாளர் நைனா முகமது தலைமையில் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமையிலும், அ.ம.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் விடங்கர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம்

அறந்தாங்கியில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, வேலாயுதம் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதேபோல் அ.ம.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவசண்முகம் தலைமையிலும், தி.மு.க. மாவட்ட அவைதலைவர் பொன்துரை தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோட்டைப்பட்டினத்தில் அண்ணா உருவப்படத்திற்கு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் அலி அக்பர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அன்னவாசல், மணமேல்குடி

அன்னவாசல் பஸ் நிலையத்தில் அண்ணா உருவப்படத்திற்கு அன்னவாசல் அ.தி.மு.க. ஒன்றியகுழு தலைவர் ராமசாமி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மணமேல்குடியில் பஸ் நிலையத்தில் இருந்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக வந்து சந்தை பேட்டையில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கீரனூர், வடகாடு

கீரனூர் கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில், ஒன்றிய செயலாளர் போஸ் உள்பட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பாலு, நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.ம.மு.க.வினர். சார்பில் நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் வடகாடு பகுதியில் அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவருடைய உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
2. தர்மபுரியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தர்மபுரியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3. தஞ்சையில் பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு
தஞ்சையில், பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
4. குமரி மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5. பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.