மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு + "||" + Collector Praveen Nair inspects development works in Velankanni

வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு

வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு
வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார். வேளாங்கண்ணி பஸ் நிலையம், செபஸ்தியார்நகர், பூக்காரத்தெரு, சுனாமிகுடியிருப்பு ஆகிய பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதிகள் ஆகும், ஆர்ச் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாழ்வான இந்த பகுதியில் மழை நீர் பாய்வதால் மழைநீர் தேங்கி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே செபஸ்தியார் நகரில் இருந்து பஸ் நிலையம் வரை செல்லும் வாய்க்காலை தூர் வாரி மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு

மேலும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணியையும், மின் புதைவட கம்பி புதைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாஹிம், உதவி செயற்பொறியாளர் (தமிழ் நாடு குடிநீர், வடிகால் வாரியம்) மோகன்தாஸ், உதவி பொறியாளர் விக்னேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க நீலகிரியில் 280 நிவாரண முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 280 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார்.
2. அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திண்டுக்கல்லில் கலெக்டர் ஆய்வு
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
5. புலியூர் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
புலியூர் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக்கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.